ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மண்டல பூஜை
ADDED :1408 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஐயப்பன் கோவிலில், ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிவித்து, விரதம் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் சார்பில், மண்டல பூஜை விழா நடைபெற்றது. முன்னதாக மூலவர் ஐயப்பனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன் துதி பாடல்கள் பாடி, பஜனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மண்டல பூஜையை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து, மாலையில் ஐயப்பன் கோவிலில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக ஐயப்பன் வீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.