பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து 5ம் நாள் விழா
ADDED :1020 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தின் ஐந்தாம் நாள் விழா நடந்தது. தொடர்ந்து பெருமாள் இன்று காலை ராமாவதாரத்தில், வில், அம்பு ஏந்தி, தாயார் மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். அப்போது பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டு, பாகவதர் கோஷ்டினர் பஜனை பாடல்கள் பாடினர். காலை 11:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.