ஊட்டி அருகே துவங்கியது கோத்தர் பழங்குடியினரின் பண்டிகை
ADDED :1020 days ago
நீலகிரி : ஊட்டி அருகே கோக்கால் கிராமத்தில், கோத்தர் பழங்குடியினரின் பண்டிகை துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில், கோத்தர் பழங்குடியின மக்கள் ஏழு கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை குலதெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி அருகே, கோக்கால் கிராமத்தில், தங்கள் குலதெய்வமான ஐயனோர்; அம்னோர் பண்டிகையின் முதல் நாளில், படையலுக்கான பணிகளை அவர்கள் துவக்கினர். இதற்காக, புது மண்பானை செய்ய, பெண்கள் தங்கள் பாரம்பரிய உடையுடன் வந்து, அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் இருந்து மண் எடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, சில நாட்கள் அவர்களின் குல தெய்வ வழிபாடு விமரிசையாக நடக்கும்.