உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வராகி அம்மன் கோயிலில் தேங்காய் தீபமிட்டு பெண்கள் வழிபாடு

வராகி அம்மன் கோயிலில் தேங்காய் தீபமிட்டு பெண்கள் வழிபாடு

உத்தரகோசமங்கை,  உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் பஞ்சமியை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வெள்ளிக்கவசு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பெண்கள் பச்சை விரலி மஞ்சள் அம்மியில் வைத்து அரைத்து பூஜைக்கு வழங்கினர். முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி பூஜைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழையிலையில் வைத்து அவற்றின் மீது தேங்காய்களை உடைத்து தீப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !