உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் மார்கழி ஐந்தாம் திருநாள் புறப்பாடு

ஸ்ரீரங்கத்தில் மார்கழி ஐந்தாம் திருநாள் புறப்பாடு

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் நேற்று மார்கழி ஐந்தாம் திருநாள் புறப்பாடான நேற்று நம்பெருமாள், அரங்கனையன்றி மற்று தெய்வம் அறியா தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை பாசுரத்திற்கு ஏற்க, ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து,  ஸ்ரீரங்க விமான பதக்கம் (பெரியபெருமாள், நம்பெருமாள், உபயநாச்சிமார்கள், பரவாசுதேவர், விபீஷணன், துவாரபாலகர்கள் என 8 திருமேனி பதிக்கப் பெற்றது)  அடுக்கு பதக்கங்கள், சிகப்புக்கல்  அபயஹஸ்தத்துடன், பச்சைவர்ண வஸ்திரம், 6 வட பெரிய முத்து சரம் சாற்றி,  பின் சேவையாக - அண்டபேரண்ட பக்க்ஷிபதக்கம், புஜ கீர்த்தி கைகளில் சாற்றி, சேவை சாதிக்கிறார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !