ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் வசதிக்காக பிரமாண்ட கூடாரம்
ADDED :982 days ago
ஸ்ரீரங்கம்: அரங்கநாத சுவாமி கோவிலில் கட்டணமில்லா வரிசையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக கொடி மரத்தில் இருந்து துரை பிரகாரம் செல்லும் வழியில் கிழக்கு பகுதியில் பக்தர்களை வெயில் ,மழை. பனியில் இருந்து காக்கும் வகையில் பிரமாண்ட கூடாரம் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடாரத்தில் சுமார் 800 பக்தர்கள் அமரும் வகையில் இருக்கைகளும் , குடிநீர் வசதியும் மேலும் மின் விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது , இங்கு பப்சீட்டில் மேற்கூரை , கியூலைன் பேரிகார்ட் அமைக்கப்பட்டுள்ளது இதன் மதிப்பு ரூ 25.5 லட்சம் ஆகும் , மேலும் கட்டணமில்லா மற்றும் ரூ 100/- கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் அமர்ந்து கொள்ள ரூ 42 லட்சம் மதிப்புள்ள 350 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளது .