உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டியில் ஐயப்பன் மண்டல பூஜை விழா

வீரபாண்டியில் ஐயப்பன் மண்டல பூஜை விழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி கல்யாண சுப்பிரமணியர் திருக்கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் ஐயப்பன் மண்டல பூஜை இம்மாதம், 30ம் தேதி நடக்கிறது.

காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து, தர்ம சாஸ்தாவுக்கு பீடபூஜை, அலங்கார மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு கோமாதா பூஜை, 9:00 மணிக்கு மகா சிறப்பு அன்னதானம் நடக்கிறது. விழாவையொட்டி, மாலை, 3:00 மணிக்கு பால விநாயகர் திருக்கோவிலில் இருந்து சுவாமி ஐயப்பன், யானை மீது அமர்ந்து செண்டை மேளத்துடன் திருவீதி உலா நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு படி பூஜை நிறைவு, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஐயப்பா சேவா சங்கம் திருக்கோயில் கமிட்டியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !