ஐயப்பன் கோயிலில் 14ம் ஆண்டு மண்டல பூஜை
ADDED :1207 days ago
காரியாபட்டி: காரியாபட்டியில் ஸ்ரீ சொர்ண ஐயப்பன் கோவிலில் 14 ம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஐயப்பனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், விபூதி உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. புஷ்ப அலங்காரத்துடன் 18ம் படி பூஜையும் நடந்தது. 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. குருநாதர்கள் வடுகராஜன், பாண்டியன், தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.