உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை ஐயப்பன் கோயில்களில் மண்டலாபிஷேகம்

அருப்புக்கோட்டை ஐயப்பன் கோயில்களில் மண்டலாபிஷேகம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டலாபிஷேகம் நடந்தது. அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள ஐயப்ப சாமி சன்னதியில் மண்டலபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், ஐயப்பன், மகாலட்சுமிக்கு சிறப்பு யாகம் நடந்தது. அன்னதானம் நடந்தது.

* பட்டாபிராமர் கோவில் அருகில் உள்ள ஆனந்த ஐயப்ப சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

* நெசவாளர் காலனியில் உள்ள ஐயப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களின் பஜனைகள் நடந்தது.

* செளடேஸ்வரி அம்மன் கோயில் உள்ள ஐயப்பன் சாமிக்கு மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. குத்துவிளக்கு பூஜை நடந்தது.

* பாலையம்பட்டி தர்ம சாஸ்தா கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஐயப்ப பக்தர்கள் பஜனைகள் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !