விநாயகர் கோயிலில் பாலஸ்தாபனம்
ADDED :1025 days ago
பழநி: பழநி மலைக்கோயில் படிப்பாதையில் அமைந்துள்ள விநாயகர் கோயிலுக்கு இன்று பாலஸ்தாபனம் நடைபெற உள்ளது. பழநி மலைக்கோயில் செல்லும் படிப்பாதையில் இடும்பன் கோயிலுக்கு மேலே உள்ள நிழல் மண்டபத்திற்கு அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருக்கும் மூசிகம், இடும்பன் கோயில் பகுதிக்கு கீழே உள்ள விநாயகர் கோயிலில் உள்ள நாகர்கள், ஸ்ரீபாதம் கற்சிலைகளுக்கு பாலஸ்தாபனம் இன்று நடைபெற உள்ளது. காலை 9: 15 மணிக்கு மேல் 9:50 மணிக்குள் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பக்தர்கள் இதில் கலந்து கொள்ள கோயில் இணை ஆணையர் நடராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.