அசோகபுரத்தில் ஐயப்பன் பூஜை கோலாகலம்
ADDED :1022 days ago
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே அசோகபுரத்தில் உள்ள ஐயப்ப சாமி கோவிலில், 53 வது ஆண்டு மண்டல பூஜை நடந்தது.
விழா, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், குத்துவிளக்கு ஏற்றி, அலங்கார ரதத்தில் செண்டை வாத்தியத்துடன் சுவாமி ஊர்வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. மதியம், மகா அன்னதானம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் செண்டை மேளம் மற்றும் சிறப்பு ஊர்வலம் நடந்தது. இரவு சிறப்பு பூஜை, தீபாராதனை தொடர்ந்து பிரசாத விநியோகம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.