உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமிகளுக்கு நாளை வெள்ளிக்கவசம்

திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமிகளுக்கு நாளை வெள்ளிக்கவசம்

திருப்பரங்குன்றம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஜன.1) திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகிறது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மூலவர்கள் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, குருவாயூரப்பன், சிவபெருமான், தட்சிணாமூர்த்திக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !