சின்னாளபட்டி ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம்
ADDED :1019 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி ஐயப்பன் கோயில் மண்டலாபிஷேக விழாவில், சங்காபிஷேகம் நடந்தது. சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்ட் ஐயப்பன் கோயிலில், சுவாமி தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில், 65ம் ஆண்டு மண்டல பூஜை டிச. 29ல் துவங்கியது. சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் சுவாமிநாத சுவாமிகள் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. தொடர்ந்து புஷ்பாஞ்சலி, பக்தி பஜனை, சக்தி பூஜை நடந்தது. நேற்று கணபதி ஹோமத்துடன், மண்டலாபிஷேகம் துவங்கியது. மகா அபிஷேகம், சரண கோஷத்துடன் மண்டல பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சங்குகளில் தீர்த்தம் நிரப்பப்பட்டு பூஜைகள் நடந்தது. அகவல் பாராயணத்துடன் கடபூஜை, சங்காபிஷேகத்தை தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.