கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED :1088 days ago
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வி.மேட்டுப்பட்டி ஸ்ரீ கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அது காலை பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு கதிர் நரசிங்கபெருமாளை தரிசித்து வழிபட்டனர்.