திருப்புத்தூர் பெருமாள் கோயில் பரமபதவாசல் திறப்பு
ADDED :1021 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் பரமபத வாசல் எழுந்தருளினார். இக்கோயிலில் நேற்று அதிகாலை நடை திறந்து காலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 9:40 மணிக்கு மூலவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. பின்னர் பரமபத வாசல் அருகில் எழுந்தருளிய உற்சவர் மற்றும் பரம்பத வாசல் கதவிற்கும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து பரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் சொர்க்கவாசல் கடந்து பெருமாளை வணங்கினர். தொடர்ந்து சுவாமி பிரகாரத்தில் மும்முறை வலம் வந்தார். இரவில் சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா நடந்தது.