வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED :1022 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை சேது நாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி மூலவர் மற்றும் உற்ஸவர், ஆழ்வார்களுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 6:00 மணிக்கு ஆழ்வார்கள் எதிர் கொண்டு வரவேற்க, சொர்க்கவாசல் வழியாக சேது நாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி எழுந்தருளினர். பக்தர்கள் திருப்பாவை, நாலாயிர திவ்ய பிரபந்தம் பல்லாண்டு பாடி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சத்யநாராயணன், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.