உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணியில் கார்த்திகை விழா

திருமலைக்கேணியில் கார்த்திகை விழா

நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத கார்த்திகை விழா பூஜை மற்றும் சாமி ஊர்வலம் நடந்தது. இதையொட்டி மூலவர் சுப்ரமணியசாமிக்கும் உற்சவர் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அரோகரா கோஷம் இட முருகப்பெருமான் கோவிலைச் சுற்றி வந்து சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !