உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ராபத்து உற்சவம் துவக்கம்

வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ராபத்து உற்சவம் துவக்கம்

சென்னை : வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில்  நேற்று முன்தினம் (2ம் தேதி )வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை ஆதிமூலப் பெருமாளுக்கு அனைத்து வகையான பால், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், திருப்பாவை வாசித்தல், மார்கழி மாத பூஜை நடந்தது. காலை 5: 00 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா நாமம் ஒலிக்க சொர்க்கவாசல் வழியாக ஆதிமூலப்பெருமாள் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 8.00 மணிக்கு உத்ஸவர் மண்டகபடி புறப்பாடு நடைபெற்றது. மாலையில் ராபத்து உற்சவம், உற்சவர் புறப்பாடு நடைபெற்றது. சுவாமி உலா வந்து அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !