உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரத்தில் நிரம்பி வழியும் உண்டியல், அதிகாரிகள் அலட்சியம்

மடப்புரத்தில் நிரம்பி வழியும் உண்டியல், அதிகாரிகள் அலட்சியம்

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் மூன்று மாதங்களாக உண்டியல் காணிக்கை எண்ணப்படாததால் நிரம்பி வழிகிறது.

மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வாரம்தோறும் செவ்வாய்,வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக அன்னதான உண்டியல் உட்பட 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. மாதம்தோறும் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவைகள் எண்ணப்படும், கோயில் நிர்வாகத்திடம் ஒரு சாவியும், அறங்காவலர் குழு தக்காரிடம் ஒரு சாவியும் இருக்கும், தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில கோயில்களில் அறங்காவலர் குழுவின் பதவி காலம் முடிந்த பின்னும் அறநிலையத்துறை இது குறித்த எழுத்து பூர்வ கடிதம் அனுப்பாததால் தக்கார் மற்றும் அறங்காவலர் குழுவினர் சாவிகளை ஒப்படைக்கவில்லை. இதனால் உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணப்படாமல் நிரம்பிய உண்டியல்களை பாதுகாப்பாக துணிகளை சுற்றி வைத்துள்னர். எனவே மாவட்ட நிர்வாகம் உண்டியலில் உள்ள காணிக்கை பணங்களை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !