உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலுக்க முத்தூர் மாகாளியம்மன் பொங்கல் பூச்சாட்டு திருவிழா

துலுக்க முத்தூர் மாகாளியம்மன் பொங்கல் பூச்சாட்டு திருவிழா

அவிநாசி: அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட துலுக்க முத்தூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள மாகாளியம்மன் கோவிலில் வருடாந்திர பொங்கல் பூச்சாட்டு திருவிழா தொடங்கியது.

இதனையடுத்து இன்று அம்மனுக்கு நகை எடுத்து வருதல், படைக்களம் எடுத்தல்,கும்பம் தாளித்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் நாளை காலை பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு செல்லுதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்டவைகளுடன் கிடாய் வெட்டுதல் நடைபெறுகின்றது. அதனைத் தொடர்ந்து கும்பம் கிணற்றில் விடும் நிகழ்ச்சி மாலையில் தீபாராதனை முடிந்து நடைபெறுகின்றது.பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. 6ம் தேதி மறு பூஜையுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !