லட்சுமிபுரத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் வெல்லம்
பெரியகுளம்: லட்சுமிபுரத்தில் இருந்து சபரிமலைக்கு அப்பம், அரவணை பாயாசத்திறாகு தினமும் 20 டன் வெல்லம் அனுப்பப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் லட்சுமிபுத்தில்-4, வடபுதுப்பட்டி, பூதிப்புரம் தலா ஒன்று என ஆறு இடங்களில் வெல்லம் ஏலம் மண்டி உள்ளது. இந்தப் பகுதிகளில் 500 ஏக்கருக்கும் அதிகமாக ஆலை கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பிரசாதமாக வழங்கப்படும் அப்பம், அரவணை பாயாசத்திற்கு தேனி மாவட்டத்திலிருந்து அனுப்பப்படும் வெல்லத்திற்கு மவுசு அதிகம். கேரளாவில் அதிக அளவு பொதுமக்கள் காபி, டீ மற்றும் இனிப்பு சுவீட் மற்றும் பலகாரங்களுக்கு வெல்லத்தை அதிகளவில் பயன்படுத்துவதால் லட்சுமிபுரத்தில் இருந்து தினமும் ( ஒரு மூடை 42 கிலோ எடை) 20 டன் மூடைகள் அனுப்பப்படுகிறது. விலை விபரம்: பச்சை வெட்டு ஒரு மூடை ரூ. 1700 முதல் 1770 வரைக்கும், ரோஸ் 1700 முதல் ரூ. 1750 ஆகவும், கருப்பு 1600 முதல் 1650 வரைக்கும் விற்பனனையாகிறது. தைப்பொங்கலுக்கும் விற்பனையாகிறது. அரசு பரிசீலனை செய்ய வேண்டும்: விவசாயி கார்த்திகேயன், லட்சுமிபுரம். ஒரு ஏக்கருக்கு கரணை நடவு, உழவு, உரமிடுதல், விவசாய நிர்வாக செலவு உட்பட ரூ. 2,25,000 செலவாகிறது. தற்போது விற்கும் விலையில் ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு மூடை ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்றால்தான் லாபம் கிடைக்கும். தமிழக அரசு, முன்னாள் முதல்வர் காமராஜர் உட்பட தலைவர்களின் பிறந்தநாளான்று பள்ளிகளில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க வேண்டும். இதனால் வெல்லத் தேவைகள் அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.