உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோயிலில் 10ம் ஆண்டு திருவிளக்கு பூஜை

பாலமுருகன் கோயிலில் 10ம் ஆண்டு திருவிளக்கு பூஜை

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே மேலச்சின்னணம்பட்டி முருக பக்தர்கள் குழு சார்பில் பாலவிநாயகர், பாலமுருகன் கோயிலில் 10ம் ஆண்டு திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ராஜ அலங்காரத்தில் பாலமுருகன் சுவாமி முக்கிய வீதிகளில் எழுந்தருளினார்.உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை, கூட்டு வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை பழனி பாதயாத்திரை மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !