திருப்பரங்குன்றம் கோயிலில் தேங்காய் தொடும் முகூர்த்தம்
ADDED :1216 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான தேங்காய் தொடும் முகூர்த்தம் நடந்தது.
கோயிலில் இருந்து மேளதாளத்துடன் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மாலை, சந்தனம், குங்குமம், ஆகியவற்றுடன் கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் அலுவலகம் சென்றனர். அங்கு துணை கமிஷனர் சுரேஷ்க்கு மரியாதை செய்து, தேங்காய் பழம் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் தொட்டுக் கொடுத்தார். அவரிடம் தெப்பத் திருவிழா விவரங்கள் அடங்கிய குறிப்புகள் வழங்கப்பட்டு திருவிழாவிற்கான நாட்கள் குறிக்கப்பட்டது. தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றம் ஜன. 22ல் நடக்கிறது.