உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோயில் பொங்கல் உற்ஸவ விழா

காளியம்மன் கோயில் பொங்கல் உற்ஸவ விழா

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி வகையறா கோயிலுடன் இணைந்த காளியம்மன் கோயில் உற்ஸவ விழா 2 நாட்கள் நடந்தது. ஜன.,3 அனைத்து கோயில்களுக்கும் பொங்கல் படி வழங்கப்பட்டது. கரகம் ஜோடித்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இன்று அலகு குத்தி, அக்னிச்சட்டி, மாவிளக்கு எடுத்தும், கரும்புத் தொட்டில் சுமந்தும், வேண்டுதல் பொம்மைகள் செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு கூழ் காய்ச்சி வழங்கப்பட்டது. இரவு ஆற்றில் கரகம் கரைக்கபட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !