உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூண்டியில் மரியாள் பிறப்பு பெருவிழா குடந்தை ஆயர் கொடியேற்றி துவக்கம்!

பூண்டியில் மரியாள் பிறப்பு பெருவிழா குடந்தை ஆயர் கொடியேற்றி துவக்கம்!

தஞ்சை: திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில், அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழாவை குடந்தை ஆயர் அந்தோணிசாமி கொடியேற்றி துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழாவை, கடந்த 30ம் தேதி மாலை ஆறு மணிக்கு குடந்தை ஆயர் அந்தோணிசாமி கொடியேற்றி துவக்கி வைத்தார். அதற்கு முன் மாதா உருவம் பொறித்த கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்பு பேண்டு வாத்திய இøகு இடையே ஆயர் அந்தோணிசாமி, மறைவட்ட முதன்மை குரு ஜான் பன்னீர்செல்வம், பங்கு குருக்கள் அழைத்து வரப்பட்டனர். கொடியை ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.பிறகு ஆயர் அந்தோணிசாமி, மறைவட்ட முதன்மை குரு ஜான்பன்னீர் செல்வம், அதிபர் செபாஸ்டின் மற்றும் பங்கு குருக்கள் கூட்டுத்திறுப்பலி "மரியாள் நம்பிக்கையின் வாயில் என்ற தலைப்பில் நடந்தது. கடந்த 31ம் தேதி முதல் நவநாட்களாக கருதப்பட்டு, ஒவ்வொரு நாளும் மாலை சிறு சப்பர தேர்பவனியும், சிறப்புத் திருப்பலியும் நடக்கிறது. விழாவில் முக்கிய தினமான, வரும் எட்டாம் தேதி மாலை 6 மணியளவில் குடந்தை ஆயர் அந்தோணி சாமி தலைமையில் "மரியாள் நற்செய்தியாளருக்கு வெற்றியின் நம்பிக்கை என்ற தலைப்பில் திருப்பலி நடக்கிறது. பின்னர் இரவு 10.30 மணிக்கு புனிதம் செய்யப்பட்ட அலங்கார தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் செபாஸ்டின், உதவி அதிபர் அருள்சாமி, ஆன்மிக குருக்கள் சூசைமாணிக்கம், மரியதாஸ், உதவிக்குருக்கள் பாஸ்டின் பிரிட்டோ, சின்னப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.பெருவிழாவையொட்டி சென்னை, தஞ்சை, திருச்சி, செங்கிப்பட்டி, கல்லணை, லால்குடி என அனைத்து பகுதிகளிலும் இருந்து சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்துக் கழக குடந்தை கோட்டம் இயக்கி வருகிறது.பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டுப்பள்ளி போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !