மதுரையில் விநாயகர் சதுர்த்திக்கு 300 விநாயகர் சிலைகள் தயார்!
மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 300 சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இச்சிலைகள், செப்.,21ல் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படவுள்ளன. செப்.,19ல் விநாயகர் சதுர்த்தி நடக்கிறது. இதை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் ஐந்து முதல் 11 அடி உயரம் கொண்ட பிளாஸ்ட்டர் ஆப் பாரீஸ் மூலப்பொருளில் வெவ்வேறு விதமான 300 விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டன. இவைகள் பொதும்பில் தனியார் இடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மதுரையில் போலீஸ் அனுமதியளித்த பல்வேறு இடங்களில் செப்.,18ல் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். மூன்று நாட்கள் வழிபாடுகள் நடத்தப்பட்டு செப்.,21ல் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். ஊர்வலத்தை இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் துவக்குகிறார். பல்வேறு இந்து அமைப்பினர் சார்பிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது.