நாளை திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா துவக்கம்!
ADDED :4786 days ago
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிறப்பு பூஜைகளுக்குப்பின், அதிகாலை 5 மணிமுதல் 5.30 மணிக்குள், கொடியேற்றப்படுகிறது. 5ம் திருவிழாவான செப்.,9ம்தேதி இரவு 7.30 மணிக்கு சுவாமிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. 7ம் திருவிழாவான, செப்.,11ம் தேதி சிவப்பு சாத்திகோத்திலும்,8ம் திருவிழாவான செப்.,12ம் தேதி வெள்ளை சாத்திகோலத்திலும் சுவாமி சண்முகர் எழுந்தருள்வார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 10ம் திருவிழாவான செப்.,14ம் தேதி காலை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் கோட்டைமணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் செய்துள்ளனர்.