உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

சிங்கம்புணரி சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதி சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சதுரவேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடத்தப்பட்டது. திருவெம்பாவை பாடப்பட்டு திருவீதி உலா நடந்தது. பிரான்மலை மங்கை பாகர் தேனம்மை கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி திருவீதி உலா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !