பெரியகுளம் பகுதியில் திருவாதிரை பூஜை நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம்
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் திருவாதிரை முன்னிட்டு நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் சிறப்பு அபிஷேகம், ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காளகஸ்தீஸ்வரர் காட்சியளித்தார். உற்சவர் நடராஜர் தெற்கு அக்ரஹாரம் வழியாக வீதி உலா நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர் ஸ்ரீராம், மாலை அணிவித்தார். பாலசுப்பிரமணியர் கோயிலில் உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. உற்சவர் வீதி உலா சென்றார். சில்வார்பட்டி முன்னையடுவ நாயனார் கோயிலில் கணபதி ஹோமம், கோ பூஜை நடந்தது. நடராஜர்,சிவகாமி அம்மன், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது சுவாமி வீதி உலா சென்றார். சிறுவர்கள் சிவனடியார்கள் வேடமணிந்து சிவன் பாடல்களை பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டது.