திருப்புவனத்தில் ஆருத்ரா தரிசனம்: வீதியுலா வந்த நடராஜர்
ADDED :1083 days ago
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்தரநாயகி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அபிஷேகமும் நடராஜர் வீதியுலாவும் நடந்தது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும், திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் 5ம் தேதி இரவு நடராஜருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், விபூதி, நெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து கால பூஜைகள் முடிந்து உற்சவ நடராஜர் சிவகாமி அம்பாளுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.