நத்தத்தில் ஆருத்ரா பூஜை
ADDED :1030 days ago
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி நடராஜருக்கு இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்துதொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாகத்துடன் கோ பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் நடராஜர் சமேத சிவகாமி தேரில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளித்தார்.