உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேவார இசைக் கச்சேரி

வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேவார இசைக் கச்சேரி

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் ஆஸ்தான ஓதுவாரின் தேவார இசைக் கச்சேரி நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழாவின் ஒரு பகுதியாக, நேற்று கோவில் வளாகத்தில் உள்ள விழா மண்டபத்தில், திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் ஆஸ்தான ஓதுவார் கதிரவனின் திருவாசக கச்சேரி நடந்தது. மிருதங்கம் திருக்கோவிலூர் சுரேந்திரன். இதில் சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று திருப்பாவை, திருவம்பாவை பாடினர். ஓய்வு பெற்ற பேராசிரியர் ரவிச்சந்திரன், ராஜேஸ்வரி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ரமேஷ் குருக்கள் ஓதுவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !