நிலக்கோட்டை ஆனந்த நடராஜர் சாமி கோயில் ஆருத்ரா தரிசனம்
ADDED :1027 days ago
நிலக்கோட்டை: நிலக்கோட்டை சிவகாமி அம்பிகா சமேத ஆனந்த நடராஜர் சாமி கோயில் ஆருத்ரா தரிசனம் மற்றும் மார்கழி மாத பூஜை நடந்தது. 20 ஆண்டுகளுக்கு பின் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஊர்வலம் நேற்று நடந்தது. சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தன. சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜர் சாமிகள் மாணிக்கவாசகர் உடன் வீதி உலா வந்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடைவீதி சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் செய்து இருந்தனர்.