ஐயனார் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது
ADDED :1081 days ago
காரைக்கால்: காரைக்காலில் ஸ்ரீபொய்யாத மூர்த்தி ஐயனார் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. காரைக்கால் திருமலைராயன்பட்டினம் கீழையூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பொய்யாத மூர்த்தி ஐயனார் கோவிலில் நேற்று ஸ்ரீபொய்யாத மூர்த்தி ஐயனார் ஸ்ரீ பூர்ணாம்பாள் பஷ்கலாம்பாள் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக ஐயனாருக்கு சிறப்புபூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் ராஜேந்திரன்,பொருளாளர் மாதவன், உறுப்பினர் விஷ்ணு உள்ளிட்ட கிராமமக்கள் பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.