செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை
ADDED :1015 days ago
சுல்தான்பேட்டை: சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையில் அமைந்துள்ளது மந்திரகிரி வேலாயுதசுவாமி திருக்கோவில் ஆகும். "தென்சேரிமலை பழம்பெருமை வாய்ந்த இத்திருக்கோயில் மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மும்மை சிறப்பு உடையது. சிவபெருமானுக்கு உமை விஷ்ணு முருகன் பூஜை செய்து உபதேசம் பெற்ற தலம் இங்கு பிரதி செவ்வாய் தோறும் "சத்ரு சம்ஹார ஷண்முகருக்கு திரிசதை அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது.இவ்வழிபாட்டில் கலந்து கொண்டு வழிபட்டு வரும் பக்தர்களுக்கு திருமண தடை நீங்கும்.வழக்கில் வெற்றி பெறுவர்.பூமி சார்ந்த காரியங்கள் மற்றும் விவசாயம் செழிக்கும்.மன நிம்மதி கிடைக்கும்.தொழில் உத்யோகம் சிறக்கும்.நேற்று நடைபெற்ற இப்பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.