சபரிமலை திருமுற்றத்தில் வந்த நாயால் பரபரப்பு
ADDED :1015 days ago
சபரிமலை: சபரிமலை திருமுற்றத்தில் வந்த நாயால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை 6:15 மணி அளவில் சன்னிதானம் திருமுற்றத்தில் ஒரு நாய் திடீர் என்று வந்தது. பக்தர் கூட்டத்தில் புகுந்த நாய் ஸ்ரீ கோயில் அருகே செல்ல முயன்றது. ஊழியர்கள் கொடுத்த பிஸ்கட்டுக்கு அடிபணியாமல் பக்தர்களுக்கு இடையே ஓடியது. இதை தொடர்ந்து தேசிய பேரழிவு தடுப்பு நிவாரண படையினர் நடத்திய நீண்ட முயற்சிக்கு பின்னர் நாயை பிடித்து வடக்கு வாசல் வழியாக வெளியே கொண்டு வந்தனர். நாய் ஏதாவது பகதர்களுடன் வந்திருக்க கூடும் என்று போலீசார் தெரிவித்தனர்.