கள்ளழகர் கோலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அருள்பாலிப்பு
ADDED :1014 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 2ம் நாளில் கள்ளழகர் கோலத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், பட்டர்கள் செய்திருந்தனர். ஜனவரி 14 வரை தினமும் காலையில் ஆண்டாள் மண்டபம் எழுந்தருளல், மதியம் எண்ணெய் காப்பு வைபவம், இரவு மூலஸ்தானம் வந்தடைதலும் நடக்கிறது. ஜனவரி 15 அன்று மணவாள மாமுனிகள் மங்களாசாசனம், ஜனவரி 16 அன்று பெரியாழ்வார் சன்னதியில் கனு வைபவம் நடக்கிறது.