உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

வடவள்ளி: வடவள்ளியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அறநிலையத்துறை மூலம் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.

ஹிந்து அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் மேலும் 10 கோவில்களில் அன்னதான திட்டம் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த, 10 கோவில்களில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான, வடவள்ளியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலும் இடம் பெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட, 10 கோவில்களில், அன்னதான திட்டத்தை, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். இதனையடுத்து, வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அன்னதான திட்ட துவக்க விழா இன்று நடந்தது. இதில், அறநிலையத்துறை இணை கமிஷனர் பரஞ்சோதி, துணை கமிஷனர் ஹர்ஷினி, கோவை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வானை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் மூலம், வடவள்ளி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நாள்தோறும், 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !