உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேக்கிழார் மன்ற ஆண்டு விழா

சேக்கிழார் மன்ற ஆண்டு விழா

ராஜபாளையம்: ராஜபாளையம் சேக்கிழார் மன்றத்தின் 38வது ஆண்டு விழா மறக்கண்ணு செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மன்ற தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார். மதிப்புறு தலைவர் முத்துகிருஷ்ண ராஜா முன்னிலை வகித்தார். தொழிலாளர் முத்தையா வரவேற்றார். செயலாளர் கணேசன் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் செயலாளர் கல்யாண வெங்கட்ராமன் மறைவிற்கு தமிழாசிரியர் மாரியப்பன் அஞ்சலி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச சுவாமிகள் ஆசியுரை வழங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார். சிவபுராணம், தேவாரம் ஒப்புவித்தல், தேவார பண்ணிசை, கட்டுரை, நாடக போட்டிகளில் 200 மாணவர்கள் பங்கேற்றனர்..
துணைத் தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தணிக்கையாளர் பழனிவேல் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !