உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் கருவறையில் மீண்டும் ஆய்வு

பழநி கோயில் கருவறையில் மீண்டும் ஆய்வு

பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக பணிக்காக இரண்டாவது முறையாக கருவறையில், சிலை பாதுகாப்பு வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன. பழநி மலைக்கோயிலில் ஜன.,26,27 ல் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேக பணிகள் மிகத்துரிதமாக நடைபெற்று வருகிறது. கோயில் உட்பிரகாரங்களில் வர்ணம் தீட்டுதல், தூண்கள் சரி செய்தல், சுவர்களுக்கு வண்ணம் அடித்தல், சுதை சிற்பங்கள் சரி செய்யும் பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர். அரசு சார்பில் உயர் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் அமைக்கப்பட்ட நவபாஷாண சிலை பாதுகாப்பு வல்லுனர் குழு கடந்த நவ.,11ல் நவபாஷாண சிலையை ஆய்வு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நவபாஷான சிலை பாதுகாப்பு வல்லுநர் குழுவினர் முறைப்படி பூஜைகள் செய்து மீண்டும் கருவறையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு, அதன் தொடர்ச்சியாக கோயில் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் இரவில் பல மணி நேரம் நீடித்தது. இதில் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உட்பட நவபாஷாண சிலை பாதுகாப்பு குழுவினர், பழநி மலைக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், வல்லுநர்கள், கோயில் ஸ்தபதி உற்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில் பக்தர்களிடையே, பழநி மலைக்கோயில் நவபாஷாண மூலவருக்கு மருந்து சாத்துதல் குறித்த விபரம் அறிய பக்தர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !