உளுந்தூர்பேட்டை ஆதிகேசவபெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவபெருமாள் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவபெருமாள் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து சீர்வரிசை தட்டுக்கள் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து பெருமாள் ஆண்டாள் உற்சவர்களுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சுவாமி சர்வ அலங்காரம் செய்யப்பட்டு கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர். ஆண்டாள் பத்ர்கள் திருவெம்பாவை, திருப்பாவை பாடினர். சிறப்பு பூஜைகளுக்கு பின் நேற்று இரவு 8.40 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு மகா தீபாரதணை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.