உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு பந்தக்கால் நடும் விழா

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு பந்தக்கால் நடும் விழா

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் (ஜன.15)ல் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தற்காலிக வாடிவாசல் அமைக்க பூஜையுடன் பந்தக்கால் ஊன்றப்பட்டது.

ஜல்லிக்கட்டிற்காக திருப்பரங்குன்றம் ரோட்டில் தற்காலிக வாடிவாசல் அமைக்கப்படும். சில தினங்களுக்குமுன்பு வாடிவாசல் பின்பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி முதல் வாடிவாசல் வரை காளைகள் வரிசையாகச் செல்ல மூங்கில் தடுப்புகளும், அவனியாபுரம் பிரிவிலிருந்து பெரியார் செல்லும் ரோட்டின் இருபுறமும் பார்வையாளர்கள் நிற்பதற்காக மூங்கில் தடுப்புகளும், காளைகள் பரிசோதனை மையம், மாடுபிடி வீரர்கள் சோதனை மையம் ஆகிய பகுதிகளில் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படுகிறது. வாடிவாசல், முன்புறம் மேடை, பார்வையாளர்களுக்கான மூங்கில், இரும்பு தடுப்புகள் அமைப்பதற்கு சிவ குருநாதசுவாமி சமேத அங்காள பரமேஸ்வரி கோயில், எம்ஜிஆர் சிலை முன்பு நேற்று காலை பந்தக்கால் நடப்பட்டது. உடனடியாக பந்தக்கால் அமைக்கும் பணி துவங்கியது. மேயர் இந்திராணி, ஆர்.டி.ஓ., பிர்தௌஸ் பாத்திமா, தாசில்தார் முத்துப்பாண்டி, மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, உதவி கமிஷனர் சையது முஸ்தபா கமால், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !