ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சங்கராந்தி சிறப்பு வழிபாடு
ஸ்ரீரங்கம் : அரங்கநாதர்சுவாமி திருக்கோயில் , இன்று 15.01.223 சங்கராந்தி (தை மாத பிறப்பு) திருநாளை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் திருச்சிவிகையில் காலை 7.00 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சங்கராந்தி மண்டபம் சென்றடைந்தார். அங்கு காலை 10.00 மதியம் 12.00 மணி வரை திருமஞ்சனம் கண்ருள்கிறார். பின்னர் திருப்பாவை சாற்றுமுறை தீர்த்தகோஷ்டி என்னும் வைபவம் நடைபெற்று ஆராதனைகள் நடைபெறும். பின்னர் ஸ்ரீநம்பெருமாள் மாலை 4.30 மணியளவில் சங்கராந்தி மண்டபத்தில் இருந்து புறப்பாடு கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். நண்பகல் 12.30 மணி முதல் 1.15 வரையிலும், அடுத்து மாலை 4.00 மணி முதல் மாலை 6.30 வரையிலும் தரிசனம் இல்லை. பிற நேரங்களில் பக்தர்கள் அரங்கநாத சுவாமியையும், உற்சவரையும் மற்ற பிற தெய்வங்களையும் தரிசனம் செய்யலாம். இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை இல்லை.