உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் பகுதிகளில் மார்கழி பூஜை நிறைவு

பெரியகுளம் பகுதிகளில் மார்கழி பூஜை நிறைவு

பெரியகுளம்: பெரியகுளம் பகுதிகளில் மார்கழி மாதம் நிறைவு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பெரியகுளம் பாலசுப்பிரமணியர், வரதராஜப் பெருமாள் கோயில், கவுமாரியம்மன், கைலாசநாதர், பாலசாஸ்தா,பாம்பாற்று ஆஞ்சநேயர், கோதண்ட ராமர்,கம்பம் ரோடு காளியம்மன், வரசித்தி விநாயகர், சீரடி சாய்பாபா, மலைமேல் வெங்கடாசலபதி, தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் உட்பட ஏராளமான கோயில்களில் மார்கழி 1 முதல் அதிகாலை 4 மணிக்கு கோயில்களில் மார்கழி மாதம் பூஜை நடக்கும். ஏராளமான பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை உட்பட ஆன்மிக பஜனை பாடியும், சுவாமி தரிசனம் செய்வர். நேற்றுடன் மார்கழி மாதம் நிறைவு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !