வடபாலை ராஜ செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
செஞ்சி: வடபாலை ராஜசெல்வ விநாயகர் கோவில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சியை அடுத்த வடபாலை ராஜசெல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு சாமி கரிக்கோல ஊர்வலம் நடந்தது. மாலை 6 மணிக்கு மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. இரவு 10 மணிக்கு சாமி சிலை நிறுவுதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு கோபூஜை, தம்பதி பூஜை, விசேஷ மூலிகை ஹோமம், 6.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 7 மணிக்கு கடம் புறப்பாடும், 7.15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாத வினியோகமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.