உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டு நீதி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை

காட்டு நீதி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை

கமுதி: கமுதி அருகே கோட்டைமேடு நீதிமன்ற வளாகத்தில் உள்ள காட்டு நீதி விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகருக்கு திருவாச்சி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனைமுன்னிட்டு விநாயகருக்கு பால்,சந்தனம்,குங்குமம்,பன்னீர், திரவிய பொடிகள் உட்பட 21 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்பு புதிதாக தயார் செய்யப்பட்ட திருவாச்சியை விநாயகருக்கு அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது. பூஜையில் கமுதி மற்றும்​ அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி சுந்தர் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !