அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம் விழா
ADDED :1003 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், தை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி வைபவம் நடந்தது. கோவை மாவட்டத்தில், வைணவ தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு தை மாதம் கிருஷ்ண பக்ஷ ஏகாதசியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து விஸ்வக்சேனர் பூஜை, லட்சுமி நாராயணர் பூஜை, கலச ஆவாஹனம் ஆகிய வைபவங்கள் நடந்தன. அதை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். வெள்ளி சப்பரத்தில் கோவில் வளாகத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு உச்ச கால பூஜை, சற்று முறை சேவிக்கப்பட்டது. இவ்விழாவில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், செயல் அலுவலர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.