உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா : கம்பம் நடப்பட்டது

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா : கம்பம் நடப்பட்டது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழாவை ஒட்டி 85 அடி நீளம் கொண்ட மூங்கில் கம்பம் நடப்பட்டது. ஆனைமலை மாசாணியம்மன் கோயிலின் முக்கிய திருவிழாவான குண்டம் திருவிழா ஆண்டு தோறும் தைமாதம் அமாவாசை நாளில்  தொடங்குவது வழக்கம்.  இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று கோவில் முன்பு  கொடியேற்றப்பட்டது இதையடுத்து கோயில் குண்டம் திருவிழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !