உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி கரியமாணிக்க பெருமாள் கோயிலில் பாலாலயம்

திருநெல்வேலி கரியமாணிக்க பெருமாள் கோயிலில் பாலாலயம்

திருநெல்வேலி; நெல்லைடவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் பரிவார மூர்த்திகளுக்கும், விமானத்திற்கும் பாலாலயம் பூஜைகள் துவங்கியது. நெல்லைடவுன் கரியமாணிக்க பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளதை முன்னிட்டு பாலாலய பூஜைகள், ஹோமம் நேற்று துவங்கியது. பரிவார மூர்த்திகளுக்கும், விமானத்திற்கும் இன்று (23ம் தேதி) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் பாலாலயம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கரியமாணிக்கபெருமாள் ஆஸ்திக சபா வக்கீல் பாலாஜி கிருஷ்ணசுவாமி, ராமபத்ரன், நயன்சிங் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !