உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராதா – மாதவ திருக்கல்யாணம்: நாம சங்கீர்த்தன பஜனை நிறைவு

ராதா – மாதவ திருக்கல்யாணம்: நாம சங்கீர்த்தன பஜனை நிறைவு

புதுச்சேரி : நாம சங்கீர்த்தன பஜனையின் நிறைவு விழாவாக ராதா - மாதவ திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடந்தது.

புதுச்சேரி வேதபாரதியின் மார்கழி மகோற்சவத்தின், நாம சங்கீர்த்தன பஜனையின் நிறைவு விழாவாக ராதா - மாதவ திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று முன்தினம் சித்தன் குடி ஜெயராம் திருமண மண்டபத்தில் துவங்கியது. முதல் நாளில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மகா மந்த்ர அகண்ட பாராயணம் டோலோற்சவம் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு ராதா - மாதவ திருக்கல்யாணம் உஞ்சவ்ருத்தியுடன் துவங்கியது. தொடர்ந்து திவ்யநாமம், அஷ்டபதிக்கு நிகழ்ச்சிக்கு பிறகு, ராதா மாதவ திருக்கல்யாணம் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். துணை சபாநாயகர் ராஜவேலு, சிவசங்கர் எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேதபாரதி பாரத பண்பாட்டு அமைப்பினரும், மார்கழி பஜனோத்சவ விழாவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !